சென்னை: தமிழகத்தில் 2ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4 ஆம் தேதி தொடங்குவதாக மருத்துவகல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (டிசம்பர்)  18 ஆம் தேதி தொடங்கியது.   இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தி அவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 21ந்தேதி முதல்  சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என கலந்து கொண்டனர்.

இந்த சமயத்தில் நிவர் புயல் காரணமாக, ஏற்பட்ட  மழை வெள்ளம் காரணமாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து,  30 ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள 1,517 இடங்களுக்கு இன்று 550 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து முதல்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.

மீதமுள்ள இடங்களுக்கான  2-ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 7.5% இடஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில் முதலில், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.  4ஆம் தேதி அரசு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. ஜனவரி 5ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.