புதுச்சேரி: கவர்னர் மாளிகை பெண் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கவர்னர் கிரண்பேடிக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை38,096 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 37,100 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 633 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த ஈஷா என்ற இளம்பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் கிரண்பேடியின் நேரடி கண்காணிப்பில், கவர்னரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் பணிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் சமீபத்தில் சொந்த ஊரான கோவைக்கு சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என தெகிறது.
ஏற்கனவே ஒருமறை கவர்னர் கிரண்பேடிக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.