சென்னை: முரசொலி மூலப்பத்திரம் விவகாரம் தொடர்பாக, தமிழக மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய கருத்துக்கள், ஸ்டாலினுக்கு மனவேதனை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்காக முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேர் அவர்மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த 28ந்தேதி அன்று தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை முடித்து வைத்து பேசிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சமூக நீதி குறித்துப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது என்றும், திமுகவினர் எப்படி பட்டியல் இன மக்களை அவமானப்படுத்தி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்ற குறிப்பிட்டிருந்ததோடு திமுகவின் முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் மூலப்பத்திரம் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதில், நான் எஸ். சி. கமிஷனில் துணைத்தலைவராக இருந்தபோதே மூலப்பத்திரம் பற்றிய புகாரை நான் விசாரிக்க கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்தது என்பதை சுட்டிக்காட்டியதுடன், ஸ்டாலின்… அந்த மூலப்பத்திரத்தை ஏன் அதை கொடுக்க மறுக்கிறீர்கள்? தைரியம் இருந்தால் அதை காட்டி விட்டுப் போகலாமே? மூலப் பத்திரத்தை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இல்லையேல் பட்டியலின மக்கள் தக்க நேரத்தில் தக்க பதில் தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எல்.முருகனுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில்,, ஸ்டாலினுக்கு மன வேதனையை ஏற்படுத்திய எல் முருகன் மன்னிப்பு கோர வேண்டும் இல்லையேல், அவர்மீது ரூ.1கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இது தொடர்பான பாஜக மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சீனிவாசன் மீது தொடரப்பட்ட வழக்கு, எழும்பூர் 14-வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் தாங்கள் தெரிவித்துள்ளது நீதிமன்ற அவமதிப்பு.
தங்களுடைய நடவடிக்கைகள் கடுமையான சீர்செய்ய முடியாத சாபத்தையும் இழப்பையும் எங்கள் கட்சிக்காரருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவதூறு அறிக்கை அறிக்கையை, நோட்டீஸ் தரப்பட்ட 48 மணி நேரத்திற்குள் திரும்பப் பெற வேண்டும் . வெளிப்படையான நிபந்தனையற்ற மன்னிப்பை எங்கள் கட்சிக்காரரிடம் கேட்க வேண்டும். மேலும் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் ஈடுபடக்கூடாது. அப்படி தவறினால் எங்கள் கட்சிக்காரர், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி உரிய குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க நேரிடும். அதன்மூலம் ஏற்படும் அனைத்து செலவுகளுக்கும் விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பாளர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
முரசொலி நிலம் விவகாரம்: ராமதாஸ் மன்னிப்பு கேட்க 48மணி நேரம் கெடு விதித்த திமுக!
முரசொலி நிலம் விவகாரம்: ராமதாஸ் மன்னிப்பு கேட்க 48மணி நேரம் கெடு விதித்த திமுக!
பஞ்சமி நிலமா? முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்! ஸ்டாலின் காட்டம்