பனாஜி: கோவாவில் கஞ்ச செடி பயிரிட மாநில சட்டத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
நமது நாட்டில், கஞ்சா போதைப்போருளாகவே பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் அதைப் போதைப்பொருளாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, கஞ்சா பயிரிடவும், உபயோகப்படுத்தவும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், கஞ்சாவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதாகவும், எனவே அதை மருந்தாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், கஞ்சா செடி பயிரிட அனுமதிக்க வேண்டும் எனவும் சில மாநில விவசாயிகள் குரல் எழுப்பி வந்தனர்.
இதற்கிடையில், ஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஐநா ஒப்புதல் அளித்தது. அதன் காரணமாக, உலகில் முதல்முறையாக கஞ்சா செடியை வளர்க்கவும் விற்கவும் உருகுவே அரசு கடந்த 2013ம் ஆண்டு அனுமதி அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலெல்லாம் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்திவருருகிறது.
இந்த நிலையில், மருத்துவ பயன்பாடுகளுக்காக கஞ்சா செடி பயிரிடுவதற்கான பரிந்துரைக்கு கோவா சட்டத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கஞ்சா செடியின் முக்கிய ஊக்கப் பொருளான டெட்ரா ஹைட்ரோ கேனாபினால் (THC – Tetra Hydro Cannabinol) வலி நிவாரணியாக மிகவும் பலன் அளிக்கக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கூறிய மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தற்போது கோவா அரசு கஞ்சா செடிகளை மருத்துவ குணங்களுக்காக பயிரிட அனுமதி அளித்துள்ளது. கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கவும், அதனை ஒரு அதிகாரப்பூர்வ தொழிலாக மாற்றவும் திட்டமிட்டு வருவதாகவும், கஞ்சா நம் நாட்டின் பாரம்பரிய செடி என்றும், இதனை மற்ற நாடுகளில் மருந்துகளை பயன்படுத்துகின்றனர், பெரும் வியாதிகளில் இருந்து விடுபட கஞ்சா செடியில் உள்ள மருத்துவ குணங்கள் உதவுவதாக தெரிவித்தார்.