பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை 7 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. பழைய கொரோனா வைரசை காட்டிலும் 70 சதவீதம் அதி வேகமாக பரவும் என்று அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், கர்நாடகாவில் 7 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா கண்டறியப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் கே. சுதாகர் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 7 பேரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.