புனே: மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறந்து கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மகாராஷ்டிராவில் தொற்று பரவல் குறைந்த பகுதிகளான புனே போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இருப்பினும், மும்பையில் முழுவதுமாக தொற்று குறையாததால் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel