திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் 90 சதவிகித பேர் பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதுபோல, தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்திய வரலாற்றிலேயே முதன்முறை என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 90% பேர் வெற்றி பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநில 15,961 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களில், 2,007 பேர் மகாத்மா காந்திய தேசிய ஊரக வேலைவாய்பு திட்ட தொழிலாளர்கள் (100நாள் வேலைவாய்ப்பு திட்டம் – எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) என்றும், மாநிலத்தில், தொழிலாளர்களின் மிகப்பெரிய பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள், அவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன்படி, கிராம அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட 2,007 தொழிலாளர்களில் 1,863 பேர் பெண்கள். மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட உறுப்பினர்களி 147 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 140 பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு தொகுதி பஞ்சாயத்துகளுக்கும் ஏராளமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (தொகுதி பஞ்சாயத்து மட்டத்தில் மொத்தம் 2,081 உறுப்பினர்கள் உள்ளனர்).
இதுகுறித்து கூறிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட மாநில மிஷன் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த புள்ளிவிவரங்கள் அடிமட்ட அளவிலான அதிகார மளிப்பதற்கான அறிகுறியாகும். “இது எங்கள் ஜனநாயகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் வலிமையின் அடையாளம்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
100நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களையும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஊக்குவித்தவர், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி கிராமத்தைச் சேர்ந்த ரஜினி பலராஜ், (வயது 32) என்பவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) கீழ் 2006 முதல் பணியாற்றி வருகிறார். அவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 2006 முதல் வார்டு மெம்பராக பணியாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து, அவர் தன்னுடன் வேலை செய்துவந்த தொழிலாளர்களையும், மற்ற தேசிய ஊரக வாய்ப்பு திட்ட தொழிலாளர்களையும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் நம்பிக்கை ஊட்டி வழிநடத்ததாகவும், அதைத்தொடர்ந்தே, மாநிலத்தில் இப்போது முடிவடைந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் 2,159 பேர் வெற்றியாளர்களாக வந்துள்ளனர். இதில் ரஜினி பலராஜூம் ஒருவர்.
இருகுறித்து கூறிய பலராஜ், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், எனக்கு நிறைய கற்றுக்கொள்ள உதவியது. நான் மக்களிடையே ஒரு நல்ல வலையமைப்பையும் உருவாக்கினேன், அது எனக்கு வெற்றி பெற உதவியது, ’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.