சீனா: 
டும் குளிர் காரணமாக  சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சீனாவின் வானிலை ஆய்வு மையம் கிழக்கு மற்றும் மத்திய சீனாவில் கடுமையான குளிர் அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று  ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று துவங்கி வியாழக்கிழமை வரை பெரும்பாலான கிழக்கு மற்றும் மத்திய சீனாவில், வெப்பநிலை 10 டிகிரி செல்சியசை அதைவிட குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு, தெற்கு வடமேற்கு மற்றும் வடகிழக்கு சீனாவில் வெப்பநிலை 12 டிகிரி வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர் காலநிலை மற்றும் பலத்த குளிர் காற்றுக்கு எதிராக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது மட்டுமல்லாமல், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று சீன வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.