தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் குறுகிய காலத்தில் தனது திறமையினால் உச்சத்தை தொட்டவர் .
பிப்ரவரி 5 ஆம் தேதி மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருத்தணி முருகன் கோயிலில் முக்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில், இன்று நடிகர் யோகி பாபு – மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், யோகி பாபுவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.