
வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 431 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து அணி.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதனிடையே களமிங்கிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரர்கள் சோபிக்கவில்லை.
இதனிடையே கேப்டன் வில்லியம்சன் 129 ரன்களை விளாசி சதமடித்தார். பிஜே வெய்ட்டிங் 73 ரன்களையும், ராஸ் டெய்லர் 70 ரன்களையும் அடித்தனர். ஹென்றி நிகோலஸ் 56 ரன்களை அடிக்க, கைல் ஜேமிசன் 32 ரன்களை தன் பங்கிற்கு சேர்க்க, நியூசிலாந் அணி 155 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்களை இரண்டாம் நாளில் சேர்த்தது.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய பாகிஸ்தான் அணி, 30 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel