திருநள்ளாறு
இன்று காலை திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனிபகவான் தனிச் சன்னிதியில் அருள் பாலித்து வருகின்றார். ஒவ்வொரு சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களும் சனிப் பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கானோரும் இங்கு தரிசனம் செய்வது வழக்கமாகும். இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சி இன்று நடந்துள்ளது.
இன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதையொட்டி திருநள்ளாற்றில் இன்று காலை விசேஷ பூஜைகள் நடந்துள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்த மக்கள் மட்டுமே கோவிலினுள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சாமி தரிசனத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகாதீபாராதனை ஆகியவற்றின் போது பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போது வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல் ஆகிய்வற்ருக்கு பிறகே ஆலயத்துக்குள் செல்ல முடிந்தது.
நமது வாசகர்களுக்கான சனிப்பெயர்ச்சி வீடியோ காட்சி இதோ:
[youtube https://www.youtube.com/watch?v=P5t-wwpzxN0]