சன் ம்யூஸிக்கில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய மஹேஸ்வரி பல சீரியலில் ஹீரோயினாக அசத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் .
குயில்,மந்திர புன்னகை,சென்னை 28 2 உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் மஹேஸ்வரி.
தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. நிதின் சத்யா தயாரிப்பில் மஹத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மஹேஸ்வரி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சில வருடங்களுக்கு பிறகு இவர் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CJLmR8uMpFl/