சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால், நடிகர் ரஜினிக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவருக்கு நெகடிவ் என சோதனை முடிவு வந்தது. இருந்தாலும், அவரக்கு பிளட்பிரஷர் ஏறி இறங்கி வந்தது. இதனால், ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.