மும்பை: தேவையானபோது மட்டுமே பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொண்டால் போதுமானது என்று ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

பகலிரவு ஆட்டமாக நடந்த அடிலெய்டு டெஸ்ட்டில், இந்திய அணி மண்ணைக் கவ்வியதையடுத்து, பிங்க் பந்தில் இந்திய அணி போதியளபு பயிற்சி மேற்கொள்ளவில்லை என்ற கருத்து எழுந்தது. இந்நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார் சச்சின்.

அவர் கூறியுள்ளதாவது, “ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பை போன்ற பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள், சிவப்பு பந்தில்தான் விளையாடப்படுகின்றன. எனவே, தேவையானபோது மட்டும் பிங்க் பந்தில் பயிற்சியெடுத்தால் போதுமானது. அதேசமயம், பிங்க மற்றும் சிவப்பு பந்துகளுக்கிடையில் சமநிலையைக் கண்டறிவது தேவையாகவுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளில், வெறும் 10% போட்டிகள் மட்டுமே பிங்க் பந்தில் ஆடப்படுகிறது” என்றார் அவர்.