டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு, 10அணிகள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கிஉள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் தற்போது 8 அணிகள் மட்டுமே விளையாடி வரும் நிலையில், மேலும் 2 அணிகள், ஐபிஎல்-லில் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இன்று ( 24ம் தேதி) நடைபெற்ற பிசிசிஐ ஆண்டுப்பொதுக்கூட்டத்தில், அதுகுறித்து விவாதிக்கப்பட்டு, 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இநத் 2 அணிகளும், 2022 தொடருக்குத்தான் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்தப்பட்டது. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து. இன்னும் தொற்றில் சரிந்த பொருளாதாரம் இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையில் ஒளிபரப்பாளர்களும் புதிய உரிமையாளர்கள் அணிகளை வாங்குவதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது.
இதுகுறித்து இன்றை பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், கொரோனா பாதிப்பு காரணமாக சந்தை நிலவரங்கள் சரியில்லாத காரணங்களினால் 2022-ல்தான் 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடருக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.