நிர்வாக வசதிக்காக சிறிய வங்கிகளை, பெரிய வங்கியுடன் மத்திய அரசாங்கம் இணைத்து வருகிறது.
இந்த வரிசையில் மத்திய அரசால் நிர்வாகம் செய்யப்படும் நான்கு திரைப்பட பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, அவை தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமான ‘’NFDC’’ யுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை ஆவணப்படமாக தயாரித்து பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் திரைப்பட கழகம் (FILM DIVISION), குழந்தைகள் திரைப்பட அமைப்பு, இந்திய தேசிய திரைப்பட ஆவண காப்பக அமைப்பு மற்றும் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் ஆகிய நான்கு அமைப்புகள் தான், திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இணைப்புக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் என்ற ஒரே குடையின் கீழ், இந்த அமைப்புகள் இனிமேல் ஒருங்கிணைந்து செயல்படும்.
– பா. பாரதி