கொல்கத்தா: விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய தினம் கொல்கத்தாவிலிருந்து ஐதராபாத்துக்கு ஏர் இந்தியா விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவும் பயணம் செய்ய ஏறியிருந்தார். விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் உடனே தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்த தகவலை கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் இன்று தெரிவித்து உள்ளார். அவரது டிவிட்டில், ஏர் இந்தியாவின் கொல்கத்தா-ஹைதராபாத் விமானம் நேற்று புறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் முழு அவசரநிலையை அறிவித்தது. விமானத்தில் இந்திய தலைமை நீதிபதி இருந்தார். அவர் இன்று ஹைதராபாத் புறப்படுவார் என்று தெரிவித்து உள்ளார்.