சென்னை:அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து, மக்களை ஏழையாக்குவதே தவறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் வியூகம் என்ற பெயரில் வழக்கறிஞர்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அதில் அவர் பேசியதாவது: வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது மட்டும் போதாது. மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம்.
பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஒருவர் ஏழையாக அரசியலுக்கு வந்து பணக்காரர் ஆகி மக்களை ஏழையாக்குவதே தவறு என்று பேசினார்.