சிதம்பரம்

சிதம்பரம்  நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் முக்கிய விழாவில் ஒன்றான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிக விமரிசையாக நடப்பது வழக்கமாகும்.  இந்த விழாவில் தங்கத் தேரோட்டங்கள் நடைபெறும்.  நடராஜர் தேரோட்டம்,  சிவகாமி அம்மன் தேரோட்டம், விநாயகர்,, சுப்ரமணியர் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டங்களும் நடைபெறும்.

இந்த தேரோட்டங்களைக் காணப் பல ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும்,. ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் அதிக அளவில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனவே கடலூர் ஆடசியர் சந்திரசேகர் சாகமூரி இது குறித்து ஒரு செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் “கொரோனா தடை வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடத்தை அனுமதிக்கப்படுகிறது.  இந்த ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதில் 28 ஆம் தேதி தங்கத் தேரோட்டத்தை நடத்த 100 பேர், நடராஜர் தேரோட்டத்துக்கு 1000 பேர், சிவகாமி அம்மன் தேரோட்டத்துக்கு 400 பேர் என அனுமதிக்கப்பட உள்ளது,.  மேலும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் தேரோட்டங்களுக்கு தலா 200 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.