
திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரியின் போது பக்தர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று (8ம் தேதி) அர்த்தோய புண்ணியகாலம் எனப்படும் மகோதய புண்ணியகால விழா சிறப்பாக நடக்கிறது. இதையொட்டி நள்ளிரவு, 1 மணிக்கு, அண்ணாமலையாருக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
இன்று அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் அண்ணாமலையார் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. ஐயங்குளத்தில் எழுந்தருளி, சூரிய உதயத்திற்கு முன்பு இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி நடந்தது.
அபோது பக்தர்கள் கூட்ட நெருக்கடியால் 4 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர். திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகோதய புண்ணிய கால விழா நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel