டெல்லியில் நாய்களை எரியூட்ட, பொது மயானம்: இறுதி சடங்குகள் நடத்தவும் மாநகராட்சி ஏற்பாடு..
மனிதர்களுக்கும், நாய்களுக்குமான பந்தம் காலந்தொட்டே இருந்து வருகிறது.
நாய்கள் இறந்தால், குடும்ப உறுப்பினரை இழந்த துக்கம் நம்மில் பலருக்கு ஏற்படுவது இயற்கை.
செல்லப்பிராணியான நாய்கள் இறந்தால், அவற்றை எரியூட்ட டெல்லியில் பொது மயானத்தை அமைக்க அங்குள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சி அங்குள்ள துவாரகா பகுதியில் இந்த மயானத்தை அமைக்கிறது.
மயானத்தில் நாய்கள் எரியூட்டப்படுவதற்கு முன்னால், மனிதர்களுக்கு நடத்தப்படுவது போல் இறுதி சடங்குகள் செய்ய பூசாரிகளை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு எரியூட்டப்படும் நாய்களின் சாம்பல் 15 நாட்களுக்கு அங்குள்ள ஸ்டோரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
அதனை பெற்று , நாய்களீன் உரிமையாளர்கள் புனித தீர்த்தங்களில் கரைத்துக்கொள்ளலாம்.
30 கிலோ எடையுள்ள நாய்களை எரிக்க 2 ஆயிரம் ரூபாய் கட்டணமும், அதற்கு மேல் எடையுள்ள நாய்களை எரிக்க 3 ஆயிரம் ரூபாய் கட்டணமும் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தெரு நாய்களுக்கு கட்டணம் கிடையாது.
-பா.பாரதி.