காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்துகுஷ் பகுதியில் காலை 6.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கமானது ஜூர்ம் மாவடத்திலிருந்து தென் கிழக்கில் 36 கிலோ மீட்டர் தூரத்திலும் 199 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.