வேலூர்:
நாசா, இஸ்ரோ என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி வின்வெளியை நொடிக்கு நொடி ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், சமயங்களில் இயற்கை இவர்களது கண்ணில் மண்னை தூவி விடும். அந்த வகையில் தான் விண்ணில் இருந்து வந்த ஒரு மர்ம பொருள் தமிழக பூமி பகுதியை தாக்கியுள்ளது.
வேலூர் அருகே நாட்றாம்பள்ளி பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை அன்று பயங்கரமாக வெடி சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தில் கல்லூரியில் பேருந்து ஓட்டுனர் பலியானார். மேலும் சிலர் காயமடைந்தனர். கல்லூரி மற்றும் பேருந்துகளில் இருந்த கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கின.
முதலில் வெடிகுண்டு வெடித்ததாக அனைரும் கருதினர்.
பின்னர் விசாரணையில் விண்ணில் இருந்து வந்து விழுந்த மர்ம பொருள் தான் வெடித்து சிதறியது தற்போது உறுதியாகியுள்ளது. விண்ணில் இருந்து வந்து விழுந்த பொருளை அப்பகுதியை சேர்ந்த சிலர் நேரில் பார்த்துள்ளனர். விண்ணில் சூரியனை சுற்றி பல விண் கற்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. சமயங்களில் இந்த கற்கள் பூமிக்கு அருகில் வருவதுண்டு. அவ்வாறு அருகில் வந்த ஒரு கல் தான் புவி ஈர்ப்பு சக்தி காரணமாக வேலூரில் விழுந்திருக்கலாம் என்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கல் பார்ப்பதற்கு பூமியில் உள் கல் போலவே இருக்கும். ஆனால், தீ பிளம்புடன் இருக்கும். இந்த கல் விழுந்திருக்கலாம். அல்லது செயலிழந்த பல செயற்கைகோள்கள் பல விண்ணில் பயனற்றும், கட்டுபாடின்றியும் மிதந்து கொண்டிருக்கிறது.
ஒரு வேலை இத்தகைய செயற்கைகோள்களின் பாகங்கள் உடைந்து வந்து விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், கல் சிதறல்கள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து, விண் கல் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மக்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறும் இந்த கருத்தை போலீசார் நம்ப மறுக்கின்றனர். கல்லூரி கட்டுமான பணியின் போது பாறைகளை உடைக்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்த குச்சிகளில் சில மண்ணுக்குள் புதைந்திருக்கும். கல்லூரி தோட்டத் தொழிலாளர்கள் குப்பைகளை எரித்தபோது ஜெலட்டின் குச்சிகள் வெடித்துள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.