சென்னை: பிபார்ம் உள்பட துணைமருத்துவ படிப்புக்கு விரைவில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் ஆன்லைனில் அக்டோபர் 1ந்தேதி வெளியிட்டது. அதன்படி, இளங்கலை மருந்தாளுநர் (பி.ஃபார்ம்), பிஸியோதெரபி, ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி, பி.எஸ்சி பிரிவில் நர்சிங், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, பி.ஓ.டி., உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான கல்வித்தகுதி பிளஸ்2 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்ட்டிருந்தது.
இநத் நிலையில், B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு . 12,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளளதாகவும், இவர்களுக்க விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.