ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி கொரலகுண்டா பகுதியை சேர்ந்த வெங்கடசிவா என்பவரின் தந்தை சந்திரசேகர் சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது 11 வது நாள் துக்க நிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் திகுவபேட்டை கிராமத்தில் நடந்தது. இதையடுத்து, திசவம் கொடுக்க, வெங்கடசிவா மற்றும் திருப்பதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் உள்பட 11 பேர் அருகே உள்ள சித்தவட்டம் பகுதியில் உள்ள பென்னா நதிக்கரைக்க சென்றனர்.
அங்கு கடமைகளை நிறைவேற்றிய பின்னர், கரை புரண்டு ஓடும் தண்ணீரைப் பார்த்ததும், அதில் நீச்சல் அடித்து விளையானர். அப்போது, நதியில் திடீரென வெள்ளம் ஏற்படவே, குளித்துக் கொண்டிருந்த 8 பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், வெங்கடசிவா மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். சோமசேகர், யஷ்வந்த், தருண், ஜெகதீஷ், ராஜேஷ், சதீஷ் மற்றும் ஷான் ஆகிய 7 பெறும் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு நீச்சல் வீரர்கள் துணையுடன் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளனது. மேலும் மூன்று சடலங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இறந்த 4 பேரில் இருவர் ராமச்சந்திரா (20), ராஜேஷ் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.