பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 2021 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் விடுதலை செய்யப்படும் நாளில், அவரது ஆதரவாளர்களால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கர்நாடக உள்துறை வெளியிட்டு உள்ளது.
வருமானத்தை மீறி சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மற்றும் அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவ்ளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மேல்முறையீடு வழக்கில், அவர்கள்மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மிக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயலலிதாவின் (J.Jayalalitha) உதவியாளரான சசிகலாவுக்கு (Sasikala) நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா மரணத்தை தழுவினர். இந்த நிலையில், உச்சநீதிமன்றமும், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை உறுதி செய்தது. இதனால், சசிகலா, இளவசரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவின் 2ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
தற்போது சசிகலாவின் தண்டனைகாலம் முடிவுக்கு வந்துள்ளது. அதையடுத்து, அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று சசிகலா விடுதலையாவார் என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உளவுத்துறை (Karnataka) அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில்,
சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா (Parappana Agrahara) சிறைக்கு வளாகத்தில் கூட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4ஆண்டு சிறையில் சசிகலாவின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா?
வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், விடுதலை செய்யப்படும் நாளன்று நிலவும் சூழலுக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களை ஏற்படலாம் என்றும், தமிழகத்தில் இருந்து சசிகலா ஆதரவாளர்கள் பெங்களூரில் முகாமிடுவதை தவிர்ககவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உள்துறையின் அறிவிப்பால், சசிகலா விடுதலை செய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
சசிகலா விடுதலையை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் அனல்பறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சசிகலா விடுதலைக்காக ரூ.10 கோடியே 10 லட்சம் கட்டியது யார் யார்? முழு விவரம்…