பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,409,062 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180,311 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 59,361 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரான்ஸ் அதிபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தான், தொடர்ந்து பணியாற்றுவதாகவும், தொலைதூரத்தில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel