டில்லி

ப்லிகி ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டு கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 36 வெளிநாட்டினரையும் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் டில்லி நிஜாமுதின் பகுதியில் இருந்த மசூதியில் தப்லிகி ஜமாத் ஒரு இஸ்லாமிய நிகழ்வை நடத்தியது.  இதில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துக் கொண்டனர்.  அதற்குப் பிறகு அவர்கள் 14 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி நாடெங்கும் நடமாடி கொரோனாவை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 44 வெளிநாட்டினரில் 36 பேர் மீது கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையில் மொத்தம் 952 வெளிநாட்டினர் இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட போதிலும் அதில் 900க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகத் தெரிய வந்துள்ளது,    அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும் அவர்கள் மேலும் கொரோனாவை பரப்பாமல் தங்கள் நாடுகளுக்குச் சென்று விட்டதாக கூறப்பட்டது.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சூடான, துனிசியா, இலங்கை, தான்சானியா தாய்லாந்து, கஜகஸ்தான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த வழக்கு விசாரணையை நடத்திய டில்லி நீதிமன்ற தலைமை நீதிபதி அருண்குமார் கர்க், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களைச் சரியாக நிஜாமுதின் காவல்துறையினர் கண்டறியவில்லை.  மேலும் அவர்ஃபக்ள் கொரோனாவை பரப்பியதற்கான சரியான் ஆதாரங்களும் அளிக்கப்படவில்லை.  குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர்கள் அந்த மசூதியில் தங்கி இருந்ததாக எவ்விதத்திலும் நிரூபிக்க கால்வதுறை தவறிவிட்டது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட 2343 பேரில் 952 வெளிநாட்டினர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  மற்றவர்களுக்கு ஏற்கனவே பாதிப்பு இருந்ததா அல்லது இங்கு வந்ததினால் பாதிக்கப்பட்டனரா என்பது குறித்துச் சரிவர கூறப்படவில்லை.  அது மட்டுமின்றி மசூதியில் எத்தனை பேர் தங்கி இருந்தனர் என்பது குறித்த விவரமும் காவல்துறையினரிடம் இல்லை.  எனவே ஆதாரம் சரியாக் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்கிறோம்” எனத் தீர்ப்பளித்துள்ளார்.,