நியூயார்க்

மெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபோன் விளையாட்டுகளில் ரூ.11 லட்சம் வரை செலவு செய்துள்ளான்.

சேட்டை செய்யும் குழந்தைகள் கையில் மொபைல்களை அளித்து விளையாட வைப்பது தற்போது தாய்மார்கள் இடையே அதிகரித்து வருகிறது.    இந்த குழந்தைகள் இதனால் இந்த விளையாட்டுகளுக்கு அடிமைகள் ஆகி விடுவதாக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.    அத்துடன் இதனால் இந்த சிறார்களின் நேரம் மட்டுமின்றி பணமும் பாழானது தற்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் வில்டன் பகுதியில் வசிக்கும் ஜெசிகா ஜான்சன் என்னும் பெண்ணுக்கு ஜார்ஜ் என ஒரு ஆறு வயது மகன் உள்ளார்.   ஜெசிகா தனது மகனுக்கு ஆப்பிள் ஐ பேட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.  அதன் பிறகு கடந்த சில மாதங்களாக அவரது கிரெடிட் கார்டில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு தகவல்கள் வந்தன.

மொத்தம் அவருடைய கிரெடிட் அட்டையில் இருந்து 16,293.10 எடுக்கப்பட்டிருந்தது.  இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.11 லட்சத்துக்கும் அதிகம் ஆகும்.   அவர் இவ்வாறு பணம் எடுக்காததால் இது ஏதோ மோசடி என அவர் நினைத்தார்,  அதையொட்டி அவர் புகார் அளித்தார்.  அந்த புகாரை விசாரித்த அதிகாரிகள் இந்த பணம் எடுத்தது மோசடி அல்ல எனவும் ஆப்பிள் நிறுவன விளையாட்டுகளுக்குக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது எனவும் தெரிவித்தனர்.

அதன் பிறகு ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட ஜெசிகாவிடம் ஆப்பிள் நிறுவனம் அவரது மகனுடைய ஐ பேட் இல் இருந்து இந்தந்த விளையாட்டுக்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என விவரம் அளித்துள்ளது.   ஆனால் அவர் இது குறித்து 60 நாட்களுக்குள் புகார் அளிக்காததால் இந்த பணத்தைத் திரும்ப அளிக்க முடியாது என  ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜெசிகா, “நான் இந்த விஷயத்தில் முன் ஜாக்கிரதையுடன் கிரெடிட் கார்ட் விவரங்களை நீக்காமல் சிறுவனிடம் விளையாட ஐ பேட் கொடுத்தது தவறு என உணர்கிறேன்.  ஆனால் இந்த விளையாட்டுக்கள் சிறு வயதினரை அதிக அளவில் செலவழிக்கத் தூண்டுகிறது.   ஒரு குழந்தைக்கு $100 க்கும் $ 1000 க்கும் வித்தியாசம் தெரியாது. “ எனத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தயவு செய்து குழந்தைகளை மொபைல் மூலம் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடுவதை ஊக்குவிக்கக் கூடாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.