நியூயார்க் :

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் பிரிட்டனில் தொடங்கியது.

இதனை தொடர்ந்து இன்று, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் பகுதியில் உள்ள லாங் ஐலண்ட் ஜூவிஸ் மெடிக்கல் சென்டரில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் சாண்ட்ரா லிண்ட்சே எனும் செவிலியருக்கு போடப்பட்டது.

நியூயார்க் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியை அந்த மாகாண ஆளுநர் அன்ட்ரூ குவோமோ தனது சமூகவலைத்தளத்தில் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு உலக மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

பயோஎன்டெக் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி, அமெரிக்காவிற்கு 1,70,000 டோஸ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தவுடன், அதனிடம் இருந்து 3,46,000 டோஸ்களை அடுத்தகட்டமாக வாங்க இருக்கிறது.

முதல் ஊசி போடப்பட்டதும் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த சாண்ட்ரா லிண்ட்சே, மக்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா வைரஸில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.