காந்தஹார்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 90 தலீபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காந்தஹார் மாகாணத்தின் பன்ஜ்வாய், ஜாரி, ஆர்பான்தப் மற்றும் மைவாண்ட் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலை நடத்தினர். மோதலில் 90 தலீபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் 15 கண்ணிவெடிகளை ராணுவத்தினர் செயலிழக்க செய்துள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு தலீபான் அமைப்பு மறுப்பு தெரிவித்து உள்ளது. காந்தஹாரில் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை என்றும் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.