மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்திருக்கிறது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 28,137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் 6,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் புதியதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 5.182 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை.
இதன்மூலம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,25,848 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 560 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 46,453 ஆக உள்ளது. ஒட்டு மொத்தமாக, 20,85,958 பேர் சிகிச்சையில் இருந்து குணம் பெற்று உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.