இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் .
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார்.
நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தை ‘ராட்சசன்’ தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்து வருகிறார்.
படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் காதல் கண்மணி லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது .