
புதுடெல்லி: தனது வளர்ந்துவரும் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கொரொனா தடுப்பு மருந்து முன்னெடுப்பைத் துவங்கியுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம், வளரும் நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை எளிதாகப் பெற்று, அவற்றை சரியான முறையில் விநியோகிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆசியா பசிபிக் தடுப்பு மருந்து அணுகல் வசதி’ என்ற பெயரில் தனது வளரும் உறுப்பு நாடுகளில், தடுப்பு மருந்து கிடைத்தலை எளிதாக்கும் வகையில் செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதன்மூலம், தடுப்பு மருந்தைப் பெறுவதற்கான நிதி உதவிகள் வழங்கப்படுவதோடு, தடுப்பு மருந்து வழங்கலை, பாதுகாப்பாகவும், சமமாகவும் மற்றும் தாக்கம் வாய்ந்த வகையிலும் மேற்கொள்வதற்கான உதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]