சென்னை

மிழகத்தில் திறக்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க கொரோனா அச்சுறுத்தலால் பல மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன.  எனவே இதற்காகத் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.  இந்த மினி கிளினிக்குகள் மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கிளினிக்குகளில் 630 கிளினிக்குகள் முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளன.   இன்னும் ஒரு மாதத்துக்குள் திறக்கப்பட உள்ள இந்த கிளினிக்குகள் ஏற்கனவே உள்ள அமைப்புகளுக்கு இடையூறு இல்லாமல் 50000 மக்களுக்கு ஒன்று எனத் திறக்கப்பட உள்ளது.,   இவை சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் நகரப் பஞ்சாயத்துப் பகுதிகளில் திறக்கப்பட உள்ளன.

ஆரம்பத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சராசரியாக 2 முதல் 3 கிளினிக்குகள் என்னும் அடிப்படையில் இவை திறக்கப்பட உள்ளன.   மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் இல்லை என்றால் வாடகைக்கு இடம் பெற்று கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன.  இவை குறைந்த 200 சதுர அடி இடத்தில் அமைக்கப்பட உள்ளன.