சென்னை: கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐ.-யில் தையல் தொழில் நுட்பம், எம்பிராய்டரி உள்பட 5 தொழில் பிரிவுகளில் 12–ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என சென்னை மாவடட கலெக்டர் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான (2020-21) மாணவிகள் சேர்க்க கிண்டியில் உள்ள அரசு மகளிர் ஐடிஐ-ல் நடைபெற்று வருகிறது.  மகளிர் தொழிற்பயிற்சி பெறும் வகையில், 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்குஇ தையல் தொழில் நுட்பம், ஆர்க்கிடெக்சுரல் டிராப்ட்ஸ்மேன், எம்பிராய்டரி, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், பேஷன் டிசைனிங் ஆகிய தொழிற்பிரிவுகளில்  நேரடிசேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்ராலட்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவிகள் 12–ந் தேதிக்குள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்ற மாணவியருக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 -மற்றும் விலையில்லா வரைபடகருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசிஎண் 044 22501982 மற்றும் 9499055651–-ஐ அணுகலாம் எனக் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.