டெல்லி: இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
கொரோனா எதிரொலியாக மந்தமாக இருந்த நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சில நாட்களாகவே இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300, தேசிய பங்குச்சந்தைன் நிப்டி 78 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின. தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் உயர்ந்து 46,103.50 எனும் புதிய உச்சத்தை எட்டியது. நிப்டி 136.15 புள்ளிகள் அதிகரித்து 13,529.10 புள்ளிகளை தொட்டது.