சிட்னி: டிஆர்எஸ் கேட்கும் முடிவை இந்தியக் கேப்டன் விராத் கோலி, தாமதமாக மேற்கொண்டதால் மேத்யூ வேடை வெளியேற்றும் முயற்சி வீணானது. இதனால், நேற்றைய டி-20 போட்டியில் நடராஜனுக்கு கிடைக்கவிருந்த 2வது விக்கெட்டும் பறிபோனது.
மேலும், இதன்மூலம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. நடராஜன் வீசிய 11வது ஓவரின் 3வது பந்தை முன்னங்கால் பேடில் வாங்கினார் மேத்யூ வேட்.
ஆனால், இதற்கு நடுவர் அவுட் தரவில்லை. அதேசமயம், டிஆர்எஸ் செல்லலாம் என்று பவுலர் நடராஜனோ அல்லது கீப்பர் ராகுலோ, கோலிக்கு ஆலோசனை வழங்கவில்லை. எனவே, வினாடிகள் கடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மைதான திரையில், பந்து காலில் பட்டதை தெளிவாகப் பார்த்த கேப்டன் கோலி, நடுவரிடம் ஓடிச்சென்று டிஆர்எஸ் கேட்டார்.
ஆனால், அதற்கு 15 வினாடிகள் கடந்துவிட்டதால், அந்த முறையீட்டை நடுவர் ஏற்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மேத்யூ வேட் 80 ரன்கள் அடித்துவிட்டார். இதனால், இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பறிபோனதோடு, நடராஜனுக்கு கிடைத்திருக்க வேண்டிய கூடுதல் விக்கெட்டும் கையை விட்டுப்போனது.