டில்லி

மாநில அரசுகளின் தலைமையில் இந்தியாவுக்கு மேலும் சீர்திருத்தங்கள் தேவை என நிதி அயோக் தலைவர் அமிதாப் காண்ட் தெரிவித்துள்ளார்.

நிதி அயோக் எனப்படும் திட்ட ஆணையத்தின் தலைவர் அமிதாப் காண்ட் இன்று ஒரு செய்தி ஊடகத்துக்குக் காணொலி மூலம் பேட்டி அளித்துள்ளார்.  அந்த போட்டியில் அவரிடம் சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  அவற்றுக்கு அவர் அளித்துள்ள பதில்களின் தொகுப்பு இதோ :

காண்ட், “இந்திய அரசு தொடர்ந்து சுரங்கம், நிலக்கரி, தொழிலாளர், விவசாயம், உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தம் செய்து வருகிறது.  ஆனால் மேலும் சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டி உள்ளது. அவற்றை மாநில அரசின் தலைமையில் நடத்துவது தேவையாகும்.   இந்தியாவில் சுதந்திரத் தன்மை அதிகம் உள்ளதால் இவற்றைச் செய்ய அரசியல் தைரியம் தேவைப்படுகிறது.  குறிப்பாகச் சீனாவுடன் போராடக் கடுமையான சீர்திருத்தங்கள் தேவையாகும்..

இந்தியாவில் 10-12 மாநிலங்கள் மட்டும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் இந்தியா அதிக அளவில் ஏன் வளரவில்லை என்பதற்குக் காரணம் தேவைப்படாது.   எனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சிக்கு ஏற்ப நடவடிக்கைகள் தேவைப்படும்.  மாநிலங்கள் முன்னேறக் குறைந்த கட்டணத்தில் மின் சக்தி கிடைக்க வேண்டும்.

விவசாயத் துறையில் பல சீர்திருத்தங்கள் ஏபட வேண்டும்.  இதற்காக வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  இந்த சட்டங்களில் குறைந்த பட்ச ஆதார விலைகள் நீக்கப்படவில்லை.  அரசு கிடங்குகளும் அகற்றப்பட மாட்டாது.  விவசாயிகள் தங்கள் பொருட்களை எங்கு விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை அவர்கள் தான் நிர்ணயிக்க வேண்டும்.

பேட்டரி உற்பத்தி துறையில் அதிகம் தேவைப்படும் மூலப்பொருளான லித்தியம் உலகில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன.  எனவே வெளியில் சொல்லப்படுவது போல் லித்தியம் பற்றாக்குறை என்பது கிடையாது..  அரசு அறிவித்துள்ள உற்பத்தியுடன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தால் பேட்டரி உற்பத்தி மட்டுமின்றி அனைத்தும் தன்னிறைவு அடையும்” எனத் தெரிவித்துள்ளார்.