மதுரை: தமிழகத்தை ஆண்ட பெருமை மிக்க மன்னர்களை அரசு கொண்டாடுவதில்லையே ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களில் முக்கியமானவர் ராஜாராஜ சோழன். தஞ்சை பெரிய கோயிலை கட்டி, உலக நாடுகளுக்கே தமிழகத்தில் கட்டிடக்கலையை நிலைநாட்டியவர். அவர் மறைந்த பிறகு, அவரது உடல் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த இடத்தில் நினைவுச்சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று முண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  மும்பையில் ஆட்சி செய்த மன்னர் சிவாஜியை அங்குள்ள மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், தமிழகத்தை ஆண்ட பெருமை மிக்க மன்னர்களை தமிழகம் கொண்டாடுவதில்லை என  வேதனை தெரிவித்தனர்.

மேலும், ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என தமிழகஅரசு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.