திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்கட்டமாகன இன்று 5 மாவட்டங்களில்  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மாநில அமைச்சர் கடகம்பள்ளி ராமச்சந்திரன், எதிர்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனப்டி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டகமாக 5 மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள   395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இதற்காக 11 ஆயிரத்து 225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 56 ஆயிரத்து 122 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த 5 மாவட்டங்களில் மொத்தம் 88 லட்சத்து 26 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில தேர்தல் கமிஷனர்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2-ம் கட்ட வாக்குப்பதிவு  கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில்  டிசம்பர் 10-ந் தேதி அன்று நடைபெற உள்ளது.

3-வது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும்.

3 கட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 34,710 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.