சென்னை: கடந்தவாரம் பாமகவினர் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தின்போது ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக பாமகவைச் சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் கடந்த 1-ம் தேதி சென்னை உள்பட பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அமைதி வழி போராட்டம் என்று கூறி, வன்முறையில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர். சாலைமறியல், பேருந்துமறியல் மட்டுமின்றி, யில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள், மின்சார பெட்டிகளை தூக்கி வைத்து மறியல் செய்தனர். ரயிலை தடுத்து நிறுத்தினர். ரயில்கள்மீது கல்வீச்சும் நடைபெற்றது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவைச்சேர்ந்தவர்கள் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலை சேர்ந்த முத்துசாமி(45), முனுசாமி (30), பழனிசாமி(36), சித்தோட்டை சேர்ந்ததமிழ்செல்வன்(26), நந்தகுமார்(20) ஆகிய 5 பாமகவினரை ரயில்வே போலீஸார் ஈரோட்டில் கைது செய்தனர்.

இவர்களை சென்னை அழைத்த வந்த விசாரணை நடத்திய காவல்துறையினல்,  அவர்கள் மீது அனுமதிஇல்லாமல் ஒரே இடத்தில் கூடுதல், தண்டவாளத்தை கடப்பது, ரயில் மறியலில் ஈடுபடுதல், கற்களை வீசி தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தசம்பவத்தில் 300 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களையும் பிடிக்கும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.