லண்டன்:
ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோருக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படாது என்றும், மாறாக அவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வரிசையில் காத்திருக்க வேண்டுமென்றும் ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி பைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிகளுக்கான அவசரகால ஒப்புதல் வந்ததையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது, இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து முழுவதும் கிடைக்கும் என்று இங்கிலாந்து அரசு நேற்று அறிவித்தது.
இந்த தடுப்பூசி பயன்பாட்டில் சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.