சிட்னி: இரண்டாவது டி-20 போட்டியில், துவக்க வீரராக களமிறங்கி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, ரன் விகிதத்தை அதிகப்படுத்தி வந்த, ஆஸ்திரேலியாவின் தற்காலிக கேப்டன் மேத்யூ வேட், ரன் அவுட் செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் இன்றையப் போட்டியில் விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தற்காலிக கேப்டனாக்கப்பட்டார்.
துவக்க வீரராக களமிறங்கிய அவர், தொடக்கம் முதலே சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 32 பந்துகளை சந்தித்த அவர், 1 சிக்ஸர் & 10 பவுண்டரிகளுடன் 58 ரன்களை விளாசினார். ஆனால், இந்தியக் கேப்டன் விராத் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
அதற்கு முன்னதாக, ஆர்கி ஷார்ட் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜனால் அவுட் செய்யப்பட்டார். தற்போது ஸ்மித் & மேக்ஸ்வெல் ஆடி வருகின்றனர்.
தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது.