மதுரை:
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது. – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து தெரிவித்தனர்.
மேலும் 2016 முதல் 2019 வரை குரூப்-1 தேர்வில் 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் விவரங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தமிழக அரசு அளித்த பதிலில் 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாதங்களாக இருப்பில் உள்ளது. தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று குறிபிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக ஆளுநரின் செயலர், உள்துறை செயலரை வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. மேலும், 20% தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதா குறித்து தமிழக ஆளுநரின் செயலர், உள்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.