சென்னை: ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ரஜினி தான் ஜனவரியில் தொடங்கப்போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை நியமித்துள்ளதாக அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய. பாஜகவில் நிர்வாகியாக இருக்கும் ஒருவர் எப்படி ரஜினி கட்சிக்கும் நிர்வாகியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிற்து.
இந்த நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில், ‘’தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்றும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’’ .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.