மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் கடந்த 27-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். டெல்லி புறநகர் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டெல்லி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 35-க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லைமுடிவு எட்டப்படாத தால் இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தைக்கு நடத்தப்பட உள்ளது.