கொச்சி:

கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட நெருங்கிய நண்பர்கள், ஒருவருக்கொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது என்ன நடக்கும்? கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆட்டோ ஓட்டுனர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட பின்பும் அவர்களுடைய நட்பு அப்படியே இருக்கின்றது.

இது ஒரு நட்பு ரீதியான போட்டி என்று 52 வயதான கே எஸ் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார், இவர் மரம்பள்ளி வார்டு, வாழக்குலம் பஞ்சாயத்தில் இடது ஜனநாயக முன்னணி(LDF) சார்பாக போட்டியிடுகிறார், அதே தொகுதியில் பாஜக சார்பாக செளதீஸ் என்பவரும், சுயேட்சை வேட்பாளராக சையீத் ஹனிஃபா என்பவரும் போட்டியிடுகிறார்கள். இந்த நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆக உள்ளனர்.

மேலும் முதல் வார்டில் பாஜக வேட்பாளராக ஸ்ரீதேவன் என்பவர் அவருடைய வகுப்பு தோழரான அன்சர் அலியை எதிர்த்து போட்டியிடுகிறார். அவ்விடத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும் பழக்கமான முகங்களான இவர்களை மக்கள் வியப்பாகவே பார்க்கின்றனர்.

மரம்பள்ளி ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்கும் ஐந்து பேரும் ஒருவருக்கு ஒருவரை எதிர்த்து போட்டியிடுவதை பார்த்து மக்கள் வியப்படைந்தனர் என்று ஸ்ரீதேவன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரச்சாரங்களும் வாக்கெடுப்பும் எங்கள் நட்பை அழித்துவிடுமா என்று மக்கள் கேட்கின்றனர், ஆனால் இதனால் எங்களுடைய நட்பு கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை. உண்மையில் தேர்தல்கள் முடிவடைந்து மீண்டும் ஒன்றிணைவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த நண்பர்கள் பிரச்சாரத்தில் தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் இல்லாமல் அவர்களுடைய பிரச்சாரத்தை ஆரோக்கியமாக செய்கிறார்கள். நாங்கள் ஒரு குடும்பம் போன்றவர்கள் என்றும், தேர்தலுக்குப் பின்னரும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று 34 வயதான அன்சார் அலி தெரிவித்துள்ளார்.