சென்னை:

ஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நாளைஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை காலை ரஜினிகாந்த்  ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொலைப்பேசி வாயிலாக அனைத்து நிர்வாகிகளுக்கும் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு என ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், நாளை ஆலோசனை நடத்த உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியானது. தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி எனச் சபதம் எடுத்து 3 வருடமாகிவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அம் தேதி தான் அரசியலுக்கு வர உள்ளதாக ரசிகர்கள் முன்பு ரஜினிகாந்த் அறிவித்தார். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.