விழுப்புரம்: பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், தற்போது பரோலில் வந்துள்ளார். வீட்டில் தங்கி உள்ள அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று பிரச்னை உள்ளது.
இதையடுத்து, அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இன்று மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். 2 நாட்கள் இங்கேயே தங்கி சிகிச்சை பெற உள்ளதாகவும், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.
அவருடன் அவரது தாயார் அற்புதம்மாளும் உள்ளார். சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel